ஓய்வூதியர் சங்கம் சார்பில் முதலாமாண்டு மாநாடு
திருப்பத்தூரில் அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம் சார்பில் முதலாமாண்டு மாநாடு நடைபெற்றது.
திருப்பத்தூரில் அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம் சார்பில் முதலாமாண்டு மாநாடு நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம் சார்பில் முதலாமாண்டு மாநாடு-அகில இந்திய பொதுசெயலாளர் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ஈத்கா மைதானம் ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம் சார்பில் முதலாண்டு மாநாடு திருப்பத்தூர் மாவட்ட செயல் தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பு செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட துணை தலைவர்கள் சையத் காதர், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் ராகவேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 8 வது ஊதியக்குழு அமைக்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மருத்துவப்படி மாதம் 3000 வழங்க வேண்டும், வருமானவரி உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் செயலர் செஞ்சிமணி, பொருளாளர் தங்கவேல் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story