அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மகளிர் தின நிகழ்ச்சி

X
அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மகளிர் தின நிகழ்ச்சி
அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மகளிர் தின நிகழ்ச்சி
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக சென்னை, அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் சு.பிரபாவதி வலையொலியாளரும்(Youtuber) ஈர்ப்பு விதி பயிற்சியாளருமாகிய கிருத்திகா பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு கல்வியில் நலம் பெற நல்ல கருத்துக்களை வழங்கினார். மேலும் சர்வதேச பெண்கள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற மெஹந்தி,நைல் ஆர்ட், ஆர்ட் ப்ரம் வேஸ்ட் மற்றும் ஸ்டால் கிரியேஷன் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்விற்கு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையரும் கல்லூரியின் செயலருமாகிய மு.இரமணிகாந்தன் தலைமை வகித்தார். சர்வதேச மகளிர் தின விழா உரையை கல்லூரியின் முதல்வர் முனைவர் கி.வெங்கடாசலம் வழங்கினார். வரவேற்புரையை கல்லூரியின் கணினி பயன்பாட்டில் துறை உதவி பேராசிரியர் முனைவர் கனிமொழி சுகுணா அவர்கள் வழங்கினார். சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரையை கணிதவியல் துறை தலைவர் முனைவர் சி.நளினி அவர்களும், தமிழ் துறை தலைவர் முனைவர் மா.வசந்தகுமாரி அவர்களும், வழங்கினார். பெண்கள் தின விழா அறிக்கையை வணிகவியல் துறை தலைவர் முனைவர் வெ. சித்ரா அவர்கள் வழங்கினார். நன்றி உரையை கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.நா சண்முகப்பிரியா அவர்கள் வழங்கினார். மேலும் இந்நிகழ்வின் ஏற்பாடுகளை கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் முனைவர் செ. பிரேமா அவர்களும், வணிகவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் சி.யாழினி அவர்களும், கணிதவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ச.சரண்யா, வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் ந.பூர்ணிமா அவர்களும், கணினி பயன்பாட்டியல் துறை உதவி பேராசிரியர் முனைவர்.சீ தாமோதரவதனி அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் மாணவிகளுக்கும் அனைத்து பெண் பேராசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும், மற்ற அனைத்து துறை தலைவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story
