தமிழகத்தில் இருந்து முதல் இராணுவ  பெண் செவிலியர் மேஜர் ஜெனரல் 

தமிழகத்தில் இருந்து முதல் இராணுவ  பெண் செவிலியர் மேஜர் ஜெனரல் 
X

தமிழகத்தில் இருந்து முதல் இராணுவ  பெண் செவிலியர் மேஜர் ஜெனரலாக இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார்.


தமிழகத்தில் இருந்து முதல் இராணுவ  பெண் செவிலியர் மேஜர் ஜெனரலாக இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாவூரை சேர்ந்தவர் இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா . இவர் டெல்லி தலைமை ராணுவ அலுவலகத்தில் உயர் அதிகாரியாய் இந்திய ராணுவ செவிலியர் சேவையில் தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு சொந்த ஊரான ராஜாவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா மற்றும் சேவையால் உச்சம் தொட்டவர் மேஜர் ஜெனரல் ஐ. டி. புளோரா என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விஜய்வசந்த் எம்.பி புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில் : - புளோராவின் குடும்பத்தில் ஆண்ணன்கள் மூன்று பேரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள். அவர்களின் கடைசி தங்கை, இக்னேசியஸ் டெலாஸ் புளோரா ராணுவத்தில் பணியாற்றி இந்திய ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழ்ப் பெண் ஆவார். இந்திய ராணுவத்தில் 38 ஆண்டுகளாக நாட்டிற்க்கு சேவை செய்து வரும் அவரை வாழ்த்துகிறேன். இந்திய ராணுவத்தின் மிக பெரிய பொறுப்பை அடைந்திருக்கும் இவர் நமது நாட்டு பெண்களுக்கு ஊக்கத்தை அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை. என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், தளவாய்சுந்தரம் எம். எல். ஏ மற்றும் பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களும், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு சால்வை அணிவித்து மேஜர் ஜெனரல் புளோரா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story