ராசிபுரத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்ட CNG இயற்கை எரிவாயு நிலையம்
ராசிபுரத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்ட CNG இயற்கை எரிவாயு நிலையம்.திருச்சி நாமக்கலில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து வீடுகளுக்கு CNG இயற்கை எரிவாயு அமைக்க திட்டமிட்டுள்ளதாக மேலாளர் பேட்டி அளித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஏற்றார் போல் தற்போது நான்கு சக்கர வாகனங்களுக்கு பயோ கேஸ்,சி.என்.ஜி உள்ளிட்ட இயற்கை எரிவாயுகள் மூலம் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக ராசிபுரம் அடுத்த ஆண்டகளுர்கேட் பகுதியில் இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் நாமக்கல் தெற்க்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், IRM மேலாளர் அறிவழகன், பணியாளர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நிலையம் ஆனது ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து IRM நிலைய மேலாளர் கூறுகையில் திருச்சி நாமக்கல் மாவட்டங்களில் தற்போது 25 சதவீத நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் வருகின்ற வருடத்திற்குள் 100% CNG எரிவாயுகள் அனைத்து கிராம, நெடுஞ்சாலை பகுதிகளில் திறக்கப் போவதாக கூறினார்.
ஏற்கனவே நாமக்கல் சேலம் திருச்சி பகுதிகளில் எட்டு சிஎன்ஜி எரிவாயு நிலையம் செயல்பட்டு வருகிறது எனவும்,தமிழ்நாட்டில் உள்ள 262 cng எரிவாயு நிலையங்களில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சிஎன்சி இணைப்புகள் கொடுப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும். சி என் ஜி பயன்பாட்டின் மூலம் வாகனங்களுக்கு குறைந்த விலையில் அதிக மைலேஜ் தருவதால் வாகன பயன்பாட்டாளர்களுக்கு இது பொருட்செலவை மிச்சப்படுத்தும் எனவும் வீடுகளில் சிஎம்சி இணைப்புகள் கொடுக்கப்படும் நிலையில் தீ விபத்துகள் நடப்பது முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன் 50 சதவீதம் பணம் மிச்சப்படுத்தப்படும் எனவும் நாமக்கல்,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளுக்கு CNG வழங்கும் திட்டமானது ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கப் போவதாக IRM நிலைய மேலாளர் அறிவழகன் கூறினார்.