திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் ஆலோசனை கூட்டம்

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் ஆலோசனை கூட்டம்

தவெக ஆலோசனை கூட்டம்

கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் பாத்திமா பீவி கட்சியின் கொள்கை , கோட்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார் .
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் தலைமையில் நடைபெற்றது . இதில் திருமங்கலம் டி. கல்லுப்பட்டி கள்ளிக்குடி பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பங்கு கொண்டனர். இக்கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் பாத்திமா பீவி கட்சியின் கொள்கை கோட்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். இதனை தொடர்ந்து தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் பேசும் போது வருகிற 2026-ம் ஆண்டுக்கு பிறகு தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதால் இப்போது இருந்து கட்சி தொண்டர்கள் தங்களது வீட்டில் உள்ள உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தொகுதி முழுவதும் நம் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைத்து வருகிற சட்டமன்றத் தேர்தலில் நமது கட்சி வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு பேசினார்.

Tags

Next Story