கோவிலூர் பாஸ்கு பெருவிழா முதல் நாள் கொண்டாட்டம்
கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் பாஸ்கர் பெருவிழா 3 நாள் நடைபெறும் விழாவின் முதல் நாள் விழாவை தர்மபுரி ஆயர் லாரன்ஸ் பையஸ் துவக்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் கோவிலூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது. ஈஸ்டர் முடிந்த அடுத்த வாரம் பாஸ்கு பெருவிழா மூன்று நாட்கள் வெகு விமரிசியாக கொண்டாடப்படுவது வழக்கம் . நேற்று விழாவின் முதல் நாள் சிறப்பாக இரவு 8.30 மணியளவில் மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பையஸ் மற்றும் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது.
இந்த விழாவில் இயேசுவின் பிறப்பு மற்றும் அவரது இறப்பு என வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக நாடகமாக நடித்துக் காட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
Next Story