தேனிக்கு வந்தடைந்த முதல் சரக்கு ரயில்


தேனி வந்த சரக்கு ரயில்
தேனிக்கு முதல் சரக்கு ரயில் நேற்று வந்தடைந்தது.
தேனி மாவட்டத்தில் அகல ரயில் பாதை அமைத்த பிறகு முதல் முறையாக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தெலுங்கானா மாநிலத்தில் இருந்து குடிமை பொருட்கள் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் கிடங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்று
தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு 8000 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது செய்யப்பட்டுள்ளது அக்டோபர் மாதத்திற்கான ஒதுக்கீடு தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் சுங்கன்பாத் ரயில் நிலையத்திலிருந்து 21 பெட்டிகளில் 1326 டன் அரிசி 26,436 மூட்டைகள் கொண்டுவரப்பட்டது. ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், போடிநாயக்கனூர், தேனி, ஆகிய 5 நுகர் பொருள் வாணிப கிட்டங்கிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணி துவங்கியது
Next Story


