முதன்முறையாக தீவிர இருதய நோய் உள்ள கர்ப்பிணிக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை

முதன்முறையாக தீவிர இருதய நோய்   உள்ள கர்ப்பிணிக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை

சாதனை படைத்த மருத்துவர்கள்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக தீவிர இருதய நோய் உள்ள கர்ப்பிணிக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மருத்துவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பொன்னேரி கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் தனலட்சுமி (வயது) 29 க/பெ ரஞ்சித்குமார் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் பாதுகாப்பான பிரசவத்திற்காகவும்முழு உடல் பரிசோதனைக்காகவும் அனுமதிக்கப்பட்டார்.

அனுமதிக்கப்பட்ட பின் சிறு மூச்சு திணறல் பிரச்சனைகளின் காரணமாக இருதய ஸ்கேன் செய்யப்பட்டது. அவர் இதய வால்வுகள் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டி இருப்பது திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கண்டறியப்பட்டது, இதய வால்வு(severe sub aortic stenosis)மிகவும் ஆபத்தான அளவில் சுருங்கி இருப்பது உறுதி செய்து இருதயம் நிபுணர்களின் பரிந்துரையில் இருதயம் காக்கும்மருந்து ஆரம்பிக்கப்பட்டது.

இந்த இதய நோய்கண்டறியப்படாமல் விட்டால் பிரசவத்தின் போது இதயம் செயல் இழந்து உயிருக்கே ஆபத்தாகும்நிலை உண்டாகக்கூடும். இந்த இருதய நோய்க்கு மயக்க மருந்து கொடுப்பதிலும் சிக்கல் உள்ளது என்பதை கண்டறியப்பட்டது. இந்த இதய நோயால் சுகபிரசவம் தாய்க்கும் சேய்க்கும் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் என்பதால் மகப்பேறு மருத்துவர்கள் குழு தன லட்சுமிக்கு நவம்பர் 27ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப் பாக பிரசவம் நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

மயக்கவியல் துறைத்தலைவர் Dr.பால முருகன், உதவிப் பேராசிர்கள் Dr.ஆனந்தராஜ்,Dr.திவாகர், Dr பாலா கிருஷ்ணா, Dr.மீனா மற்றும் மகப்பேறு துறை தலைவர் Dr. அருமைக்கண்ணு, இணை பேராசிரியர் Dr. ஜெயந்தி, உதவி பேராசிரியர் Dr. ஜீவிதா ஆகியோரால் தனலட்சுமிக்கு தீவிர இருதய துடிப்பு கண்காணிப்பில் அறுவை சிகிச்சை தொடங்கப் பட்டு எந்த ஒரு சிக்கல்கள் இல்லாமல் செயற்கை சுவாசம் மூலம் முழு மயக்க மருந்து கொடுத்து, உயிர் காக்கும் மருந்துகளின் உதவியுடன் வெற்றிகரமான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டன.

அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் தனலட்சுமிக்கு இரண்டு நாள் முழுவதும் மருத்துவ குழுவினர் தொடர்தீவிர கண்காணிப்பில் வைத்து தனலட்சு மியை அபாய நிலையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டார். இப்பொழுது தாய் மற்றும் குழந்தை இருவரும் ஒன்றாக நல்ல நிலையில் உள்ளனர். அரசு மருத்துவமனையில் இது போன்ற தீவிர இருதய நோய் உள்ள கர்ப்பிணிக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்டது இதுவே முதல் முறை. மேலும் இதன் முன்னர் பல்வேறு இதய நோய்களால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை செய்து தாயும் சேயும் நலமுடன் டிஸ்டார்ஜ் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது இந்த முயற்சியை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் Dr. ஹரிஹரன், மருத்துவ கண்காணிப்பாளர் Dr. பாலசுப்பிரமணியம் மற்றும் ஆர்எம்ஓ Dr.கதிர், Dr. யுவராஜ் பாராட்டினர்.

Tags

Next Story