விஈடி கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

விஈடி கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
X

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

விஈடி கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல் லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கவிழா நடை பெற்றது. பட்டிமன்றப் பேச்சாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் பர்வீன் சுல் தானா பங்கேற்று 'வல்லமை தாராயோ' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இதில், கல்வியின் இன்றியமையாமை, கற்றல் உத்திகள், விடாமுயற் சியின் வலிமை, கவனிக்கும் பண்புகள், இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் எவ்வாறு விழிப்புடன் செயல்படவேண்டும், பேச்சுத் திறனை எவ் வாறு வளர்த்துக் கொள்ளவேண்டும், கல்லூரி நூலகங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

வேளாளர் கல்வி அறக்கட்டனையின் துணைச்செயலர் செ.நல்லசாமி தலைமை வகித்தார். விஇடி கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், பொருளாளர் பி.கே.பி.அருண் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர வி.பி.நல்லசாமி வர வேற்றார்.

நிர்வாக அலுவலர் எஸ். லோகேஷ்குமார் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையையும், கல்லூரி சேர்க்கை ஆலோசகர் டி.குகப்பிரியா கல் லூரி குறித்த அறிமுக உரையையும் வழங்கினர். இதில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்

Tags

Next Story