கேஎஸ்ஆர் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா !

கேஎஸ்ஆர்  கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா !

கேஎஸ்ஆர் கல்லூரி

கே எஸ் ஆர் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதலாமாண்டு இளநிலை வகுப்புகள் தொடக்கவிழா நடைபெற்றது. கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்ன ராஜேஷ்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் வே.பத்மநாபன் அவர்கள் தலைமையுரை வழங்கினார். அப்போது மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி அவர்களுக்கான பணி வாய்ப்பினைப் பெற்று செல்வதற்கான சிறந்த களமாக கே.எஸ்.ஆர் கல்லூரி இருக்கும் என்றும், மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் கல்லூரியின் அனைத்துறைகளின் டீன்கள் மற்றும் துறைத்தலைவர்களை அறிமுகப்படுத்தினார். கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் அகிலா முத்துராமலிங்கம், கல்லூரியின் இயக்குநர்-கல்வி திரு.மோகன் மற்றும் மாணவர் திறன் மேம்பாட்டு இயக்குநர் முனைவர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அப்போது மாணவர்கள் தன்னம்பிக்கையோடு சவால்களை எதிர்கொண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினர். இவ்விழாவிற்கு தன்னம்பிக்கைப் பேச்சாளர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 'உள்ளத்தனையது உயர்வு ' என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார். அப்போது கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனம் தலைசிறந்த மாணவர்களை உருவாக்கும் ஒரு கல்வி சாம்ராஜ்யம் என்று பாராட்டினார். மேலும் நமது தாய்மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்பு உண்டு என்றும், மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதித்து நடந்தால் வாழ்வில் உயரத்தை அடைய முடியும் என்று கூறினார். மாணவர்கள் ஆடம்பரத்தையும், செல்போன் பயன்பாட்டையும் தவிர்ப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியில் பொறுப்புள்ள குடிமகனாக திகழ முடியும் என்றும் அறிவுறுத்தினார். அதன்பின்னர் எஸ்.ஐ.பி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் வெங்கடேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது.

Tags

Next Story