மீன் பிடி தடைக்காலம் - பழுது நீக்கும் பணி மேற்கொள்ளும் மீனவர்கள்

மீன் பிடி தடை காலம் துவங்கியுள்ளதால் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் படகுகளின் பழுது நீக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை: தமிழகக் கடற்பகுதியில் 61 நாட்களுக்கான மீன்பிடித் தடைக்காலம் திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்களுக்கும் இந்தத் தடை பொருந்துகிறது.

வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி போன்ற கடற்பகுதிகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின்இனப்பெருக்க காலமாக அறியப்பட்டுள்ளது. கடல் வாழ் உயிரினங்களைப் பெருக்கும் வகையில் ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன் 14 வரையில் விசைப்படகு, இழுவைப் படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய 2 விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து 550 விசைப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இவ்விரு இறங்குதளங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு தடைக்காலம் திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது.தடைக் காலத்தில் மீனவர்கள் படகுகளின் பழுது நீக்கும் பணி மேற்கொள்வர்.

Tags

Next Story