மீன் முள் தொண்டையில் சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலி!

மீன் முள் தொண்டையில் சிக்கியதால்  மூச்சு திணறல் ஏற்பட்டு பலி!

மீன் முள் தொண்டையில் சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலி

மீன் முள் தொண்டையில் சிக்கியதற்கு சிகிச்சை பெற்று வந்தவர் மூச்சு திணறல் ஏற்பட்டு பலி. போலீசார் வழக்குப்பதிவு.
கோவை: பீளமேடு தண்னீர்பந்தல் பகுதியில் வசித்து வரும் ஜங்கூர் சஹானி (48).கடந்த 15 வருடங்களாக கோவையில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.கடந்த ஐந்து நாட்களுக்கு முன் மீன் சாப்பிட்டபோது அவரது தொண்டையில் முள் சிக்கி உள்ளது.இதனை அடுத்து கோவை அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.மறுநாளும் சிகிச்சைக்கு சென்று விட்டு வீடு திரும்பியவருக்கு இரவு 9 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜங்கூர் சஹானியை சோதித்து பார்த்து அவர் உயிரிழந்து இருப்பதை உறுதி செய்தனர்.இதனை தொடர்ந்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார் ஜங்கூர் சஹானியின் உடலை மீட்டு சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story