ராமநாதபுரம்: எதிர்பார்ப்புகளுடன் மீனவ குடும்பங்கள்
இலங்கை சிறையில் இருந்து தமிழகம் திரும்பிய மீனவர்கள்
ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 64 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த அக்டோபர் மாதத்தில் 6 முறை அடுத்தடுத்து கைது செய்தது.இலங்கை சிறையில் இருந்த ஒரு மீனவரை தவிர மற்ற 63 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. ஒரு மீனவர் மட்டும், தற்போது இரண்டாவது முறையாக கைதாகி இருப்பதாக கூறி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை சிறையில் அடைத்தனர்.
விடுவிக்கப்பட்ட 63 மீனவர்களில் 3 கடந்த 21ந் தேதி 15 மீனவர்கள், 22 ந்தேதி 15 மீனவர்கள், 24ந் தேதி 12 மீனவர்கள் என்று மூன்று தடவையாக 42 மீனவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மீதமிருந்த 21 தமிழக மீனவர்களும் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
அதிகாலை 4:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் வருகைக்காக மீனவ குடும்பங்கள் மீன்வள துறை அலுவலகத்தில் காத்திருக்கின்றனர்.