இளம்பெண் பலாத்கார விவகாரம்- தலைமறைவான மீனவர் கைது

இளம்பெண் பலாத்கார  விவகாரம்- தலைமறைவான மீனவர் கைது
தலைமறைவான மீனவர் கைது
தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும். நித்திரவிளை அருகே ஒரு கிராமத்தில் உள்ள 20 வயது வாலிபரும் காதலர்கள். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரி - கேரள மாநில எல்லை பகுதியான பருத்தியூரில் உள்ள சுற்றுலா தலத்திற்கு பொழுதை கழிக்க காதலனின் நண்பர் ஒருவருமாக சென்றனர். இரவு வேளையான போது அந்த பகுதியில் உள்ள கால்வாய் கரையில் இருட்டான பகுதியில் காதலன் மது அருந்திவிட்டு காதலியுடன் எல்லை மீறி நடந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அங்கு வந்த கும்பல் காதலனையும், அவரது நண்பரின் ஆடைகளை கழற்ற வைத்து தாக்கினார்.

தொடர்ந்து காதலியை மிரட்டி ஒருவர் பின் ஒருவராக இரண்டு பேர் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பருத்தியூர் பகுதியை சேர்ந்த ஐபின், காதலன் சரத்ப்ரியன் என்பவரையும் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியான சாஜன் (29) என்பவரை கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story