ஓமன் நாட்டில் மீனவர் சிறை - மீட்க மனைவி கோரிக்கை

ஓமன் நாட்டில் மீனவர் சிறை - மீட்க மனைவி கோரிக்கை
கலெக்டரிடம் புகார்
கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தை சேர்ந்தவர் சோபா ராணி. இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- எனக்கு பெதலிஸ் என்ற கணவரும், 3 குழந்தைகளும் உண்டு. என் கணவர் கடந்த 15-4-2022 அன்று ஓமன் நாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றார். அவரோடு சேர்த்து 9 பேர் சென்றனர். அங்கு சூப்பர்வைசர் அவர்களுடைய சம்பளப் பணத்தை பிடித்து வைத்துக் கொண்டு அதற்கான காரணத்தை கூறாமல் தட்டிக் கழித்து வந்துள்ளார். இதனால் சம்பளம் கேட்டு மீனவர்களுக்கும், சூப்பர் வைசருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த நிலையில் என் கணவரை தொழிலுக்கு செல்ல விடாமல் தடுத்துள்ளனர். மேலும் 4 பேர் வந்து என் கணவரை கையில் சங்கிலி மாட்டி கடத்தி சென்றுள்ளனர். உடன் உள்ள மீனவர்கள் தடுத்தும் அவர்கள் கேட்காமல் என் கணவரை அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் ஒரு வாரம் ஆகியும் என் கணவர் எங்கு இருக்கிறார்? என்று தெரியவில்லை. சிறை பிடிக்கப்பட்ட என் கணவரை விடுவிக்கவும், அவர் பாதுகாப்பாக நாடு திரும்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story