பைக் விபத்தில் சிக்கிய மீன்பிடி தொழிலாளி உயிரிழப்பு

பைக் விபத்தில் சிக்கிய மீன்பிடி தொழிலாளி உயிரிழப்பு
X
விபத்தில் மீன்பிடி தொழிலாளி பலி
கன்னியாகுமரி மாவட்டம்,குளைச்சல் அருகே இருசக்கர வாகன விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மீன்பிடி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே லியோன் நகர் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் மகன் அனீஸ் குமார் (36) மீன்பிடி தொழில் செய்து வந்தார். தூத்துக்குடியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் மகன் ஒலிவிஸ்டன் தற்போது கோடி முனையில் வசித்து வருகிறார். இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள்.

கடந்த 23ஆம் தேதி மாலை 2பேரும் குளச்சல் சந்திப்பில் இருந்து மேற்கு கடற்கரை சாலையில் கோடி முனை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஒலிவிஸ்டன் பைக்கை ஓட்ட அனீஸ் குமார் பின்னால் இருந்தார். திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறிய பைக் எதிர்பாராத விதமாக அருகில் உள்ள காம்பவுண்ட் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அனீஸ் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அனிஷ் குமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சகாய நிதியா குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story