மீனவர் தற்கொலை வழக்கு; மறுவிசாரணைக்கு வலியுறுத்தி போராட்டம்

மீனவர் தற்கொலை வழக்கு; மறுவிசாரணைக்கு வலியுறுத்தி போராட்டம்

இணையம் புத்தன் துறையில் மீனவர் தற்கொலை செய்த வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்ய கோரி பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

இணையம் புத்தன் துறையில் மீனவர் தற்கொலை செய்த வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்ய கோரி பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டின்ராஜ்.மீனவரான இவர் கடந்த 07.04.2024 -ல் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில், உடலை மீட்டு ஆசாரிபள்ளத்தில் பிரேத பரிசோதனைக்கு பின், இந்த வழக்கை புதுக்கடை போலீஸார் தற்கொலை வழக்காக வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

ஆனால், உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கிறிஸ்டின்ராஜ் தற்கொலை செய்யவில்லை எனவும், மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார் என மாவட்ட போலீஸ் அதிகாரி , மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது. இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி இனயம்புத்தன்துறை மீனவர் கிராமத்தில் ஊர்மக்கள் சார்பில் திடீரென நேற்று சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.

இதில்,திரளான இனயம்புத்தன்துறை மீனவமக்கள் பங்கேற்றனர்.சம்பவ இடத்தில் புதுக்கடை இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து குளச்சல் ஏஎஸ்பி பிரவீன் கெளதம் மற்றும் அதிகாரிகள் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்ததையில் புதன்கிழமை மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ் பி - யிடம் நேரடியாக சந்தித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டு, போராட்டம் கைவிடப்பட்டது .

Tags

Next Story