மோர்ப்பண்ணையில் மீனவர் தின கொண்டாட்டம்
உலக மீனவர் தின விழா
மீனவம் காப்போம் மக்கள் இயக்கத்தின் சார்பில் உலக மீனவர் தினம் மோர்ப்பண்ணை கிராமத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.மீனவம் காப்போம் மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமையில் கிராம தலைவர் ராஜதுரை சமூக ஆர்வலர் துரைபாலன்,செயலாளர் சங்கர் பொருளாளர் தாமரைக்கனி ஆகியோர் முன்னிலையில் உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது.மோர்ப்பண்ணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மீனவர்கள் சம்பந்தமான வரலாற்று தகவல்களை கூறி குழந்தைகளை உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் தக்ஷின் பவுண்டேஷன் சண்முகப்பிரியா, விவேகானந்தா கேந்திர ஆசிரியர் சிங்கராஜ் மீனவம் காப்போம் சின்னராசு,கண்ணன், வினோத்,புதுமலை, சேசுகுமார், கார்த்திக்ராஜா, சமயபிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story