குமரியில் மீனவர் தின மாநாடு - கனிமொழி எம்.பி பங்கேற்பு

குமரியில் மீனவர் தின மாநாடு - கனிமொழி எம்.பி பங்கேற்பு
கனிமொழி எம்.பி 
குமரி மாவட்ட மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் உலக மீனவர் தின கோரிக்கை மாநாடு, மற்றும் கோடி முனையில் மீன் பிடி துறைமுகத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு விழா நேற்று கோடி முனையில் நடைபெற்றது. ஊர் தலைவர் சார்லஸ் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரமிஜியுஸ் ஆசியுரை வழங்கினார். கனிமொழி எம் பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,மீனவர்களுக்கு என தனி மாநாடு நடத்தியவர் தமிழக முதல்வர். மீனவர்கள் மாநாட்டில் மீன்பிடி தடை கால நிவாரணத் தொகையை 5000 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தியவர் தமிழக முதல்வர். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக ஒன்றிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நானும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். என பேசினார். இந்த கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி, ராஜேஷ்குமார் எம் எல் எ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story