குளச்சலில் மீன் வியாபாரிகள் திடீர் வேலை நிறுத்தம்.

குளச்சலில் மீன் வியாபாரிகள் திடீர் வேலை நிறுத்தம்.
குளச்சல் மீன் பிடி துறைமுக வேலை நிறுத்தம்
3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் ஏராளம் விசைப்படகுகள், மற்றும் பைபர் வள்ளங்களில் மீன்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த துறைமுகத்தில் குறிப்பிட்ட சில மீன்கள் பிடித்து விற்பனை செய்ய தடை உள்ளது. ஆனால் தடையை மீறி, அரசால் தடை செய்யப்பட்ட “சாவாளை” மீன்களை பிடித்து, நேரடியாக கோழித்தீவன நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த செயலுக்கு விசைப்படகு உரிமையாளர்களை கண்டித்தும், மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டும் மீன் வியாபாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இன்று குளச்சல் மீன்பிடி குறைமுகத்தில் டண் கணக்கில் மீன்கள் விசைப்படகுகளில் தேக்கமாகியுள்ளது. சுமார் 3-கோடி ரூபாய் வரை மீன் வர்த்தகம் பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story