மீனவர்கள் குறைத்தீர்கும் நாள் கூட்டம்

மீனவர்கள் குறைத்தீர்கும் நாள் கூட்டம்

ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டம் 

தூத்துக்குடியில் மீனவர்கள் குறைத்தீர்கும் நாள் கூட்டத்தில் மாலத்தீவு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகை மீட்டுத் தர ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தூத்துக்குடியில் மாதம் தோறும் மீனவர்களுக்கான குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கான கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வைத்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு மீனவ பகுதிகளை சார்ந்த மீனவர்கள் கலந்துகொண்டு மீனவர்களுக்கான பிரச்சனை மற்றும் மீனவர் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசினர் மேலும் கடந்த அக்டோபர் மாதம் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 12-பேரை எல்லைதாண்டி மீன்பிடிக்க வந்ததாக மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர்.

பின்னர் விடுதலை செய்தனர் ஆனால் மீனவர்களின் படகினை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல் 2-கோடி ரூபாய் 28-லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் மேலும் 30-நாட்களுக்குள் அபராத தொகையினை கட்ட வேண்டும் எனவும் மாலத்தீவு அரசு கூறி உள்ளது. எனவே மீனவர்களின் படகினை மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டுமென மீனவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Tags

Next Story