துறைமுகத்தில் ஊழல் - மீனவர்கள் ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் அந்தோணி தலைமையில் மாவட்டத் தலைவர் அலெக்சாண்டர், பொதுச் செயலாளர் சகாய பாபு, பொருளாளர் பிராங்கிளின் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமானம் சரியில்லாததால் இருபதுக்கு மேற்பட்ட மீனவர்கள் இதுவரையிலும் உயிரிழந்துள்ளனர்.
பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஆகியுள்ளது. அரசு செலவு செய்யும் பணம் வெளிப்படையாக கொள்ளையடிக்கப்படுவது மேல் அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே துறைமுக பணி ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விரிவான விசாரணை நடத்த வேண்டும். அதுபோல் மீன்வளத் துறையில் நடந்துள்ள அனைத்து வேலைகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.