மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம்

மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம்

தூத்துக்குடி துறைமுகம்


தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் நாளை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக கடற் பகுதி மற்றும் குமரி கடல் பகுதி அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வரும் இரண்டு நாட்கள் 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை பலத்த சூறாவளி காற்று வீச கூடும் எனவே நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டாம் என மீன்வளத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதைதொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் மேலும் மறு அறிவிப்பு வந்த பின்னரே கடலுக்குச் செல்ல வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story