தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் திடீர் மறியல்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் திடீர் மறியல்
மீனவர்கள் போராட்டம்
குமரி மாவட்டத்தின் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூத்தூர், இனயம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு , பைபர் படகு, கட்டு மரங்கள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். இந்த மீன்பிடி துறைமுகத்தில் கடலில் உள்ள மீன்களை பாதுகாக்கும் நோக்கத்தில் வளமீன்கள் என கூறப்படும் சிறுவகை குஞ்சு மீன்களை இறக்குவதற்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டது. மீன்வளத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட மீன்களை இறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் கிளாத்தி மீன்களை இறக்க கூடாது என கூறப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு துறைமுக அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கிளாத்தி மீன்களை இரவு 10 மணி முதல் விடியற்காலம் 5 மணி வரை இறக்கலாம் என முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்றும் ஒரு படகில் வந்த கிளாத்தி மீன்களை இறக்க விடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். உடனே மீனவர்கள் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் கிளாத்தி மீன்களை இறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டு விசைப்படகு உரிமையாளர் ஜெரோம் தலைமையில் மீன்பிடி துறைமுகம் உள்ளே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story