தங்கச்சிமடேத்தில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்

தங்கச்சிமடேத்தில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்

மீனவர்கள் ஆலோசனை கூட்டம்


ராமேஸ்வரம் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஐந்து விசைப்படகு மற்றும் 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது நடவடிக்கை காரணமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க செயலாளர் வி பி ஜேசுராஜா தலைமையில் ஜான் மடிக்கட்டும் இடத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் நேற்று 28 10 2023 அன்று அரசு அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்ற ஐந்து விசைப்படகையும் 37 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள விசைப்படகையும் மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் செய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் நாட்டு படகுகளையும் மீட்டு தரவும் மீட்க முடியாத நிலையில் மூழ்கிப் போன படகுளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டிய தீர்மானம் இலங்கை நீதிமன்றத்தில் படகு உரிமையாளர்கள் நேரில் சென்று ஆஜராகி இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஒன்பது விசைப்படகையும் மீட்பு குழு சென்று மீட்டு வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீண்ட காலமாக இருந்து வரும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக இந்திய இலங்கை அரசு அதிகாரிகள் இருநாட்டு மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் இலங்கை மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் மோதலை ஏற்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையை ஏவி விட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் செயல்படும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டெக்ளஸ் தேவானந்தா அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேற்கண்ட தீர்மானங்களையும் கோரிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற கோரி வருகின்ற 3 11 2023 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மண்டபம் ரயில் நிலையம் முன்பு ரயில் மறியல் போராட்டம் செய்வது எனவும் மீனவர்களின் ரயில் மறியல் போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டம் மீனவர்களையும் ஒன்று திரட்டி மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

மேலும் இதுவரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அனைத்து விசைப்படகுகளையும் மத்திய மாநில அரசு மீட்டர் தரும் வரை தங்கச்சிமடத்தில் நவம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணா விரத போரட்டம் நடத்த உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Tags

Next Story