மதுராந்தகம் அருகே மீனவர்களின் வலைகள் எரிந்து நாசம்

மதுராந்தகம் அருகே மீனவர்களின் வலைகள் எரிந்து நாசம்
மீனவர்களின் வலைகள் எரிந்து நாசம்
மதுராந்தகம் அருகே மீனவர்களின் வலைகள் எரிந்து நாசம் ஆனது.

மதுராந்தகம் அடுத்த , சூனாம்பேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடப்பாக்கம் மீனவ குப்பத்தில் வசித்து வருபவர்கள் லோகு வயது 32 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் வயது 34 இருவரும் பைபர் படகில் சென்று தினந்தோறும் மீன் பிடித்து வந்து வியாபாரம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று விட்டு தனது பைபர் படையில் உள்ள வலைகளை கடற்கரையோரம் உள்ள ஓலை குடிசையில் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவு திடீரென குடிசைக்குள் இருக்கும் மீன் வலைகள் எரியத் தொடங்கியுள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மல மலவென பரவி அங்குள்ள அனைத்து வலைகளும் எரிந்து நாசமாயின.

இந்த மீன் வலைகளின் மதிப்பு பல லட்சம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லோகு மற்றும் செந்தில் ஆகிய இருவரும் சூனாம்பேடு காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வலைகளை யாரேனும் முன்விரோதம் காரணமாக தீயிட்டு கொளுத்தினார்களா?1 அல்லது வேறு ஏதேனும் காரணமாக என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story