குமரியில் இன்று முதல் மீன்பிடி  தடை : மீறினால்  நடவடிக்கை

குமரியில் இன்று முதல் மீன்பிடி  தடை : மீறினால்  நடவடிக்கை
மீன்பிடி தடைக்காலம் 
கன்னியாகுமரியில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகளின் கீழ் ஆண்டுதோறும் 61 நாட்களுக்கு இழுவலை விசைப்படகுகள் மற்றும் தூண்டில் வழிவலை விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான தடை உத்தரவு இன்று 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடைக்காலம் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு தடை அமலில் இருக்கும். தடைக்காலம் அமலுக்கு வருவதை ஒட்டி கன்னியாகுமரி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 350 மேற்பட்ட விசை படகுகள் மீன்பிடிக்க செல்லாது.

தடைக்காலம் அமலுக்கு வந்தபின், இந்த தடை மீறி மீன்பிடி தொழில் செய்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு ரத்து செய்யப்பட்டு, வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் நிறுத்த செய்யப்பட்டு, அத்துடன் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags

Next Story