வரும் 15ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

வரும் 15ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளது.

தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி மீன் பிடித் தடைக்காலம் தொடங்குகிறது. மீன்களின் இனப்பெருக்க காலம் என ஒன்றிய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14- ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலமாக அறிவித்து, மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதித்து வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில், உள்ள விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இந்த ஆண்டு, போதியளவு மீன் கிடைக்காததால், வருவாய் இன்றியும், டீசல் விலை உயர்வாலும் மிகுந்த சிரமத்தில் இருந்தனர். எனவே இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்கவேண்டும் அல்லது 45 நாட்களாக குறைக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு தடைக்காலத்தை ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் மே மாதம் 15-ஆம் தேதி வரை ஒரு மாதமும், மழை, புயல், இயற்கை சீற்றம் ஏற்படும் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு மாதமும் என 2 முறையாக தடைக்காலத்தை மாற்றி அமல்படுத்த வேண்டும் என்பது மீனவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டும் வழக்கம்போல வருகிற 15-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14- ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளதால் மீனவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 45 நாட்கள் மட்டுமே தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. அதேபோல தடைக்கால நாட்களை குறைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், மீன்பிடித் தடைக்காலத்தில் தங்கள் படகுகளை கரைக்கு ஏற்றி மராமத்து செய்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவர். படகுகளை பராமரிக்க அரசு மானியம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story