இனயம் புத்தன்துறையில்  மீன்பிடி படகு தளம்-  அமைச்சரிடம் மனு

இனயம் புத்தன்துறையில்  மீன்பிடி படகு தளம்-  அமைச்சரிடம் மனு
X
அமைச்சரிடம் மனு அளித்த கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார்
இனயம் புத்தன்துறையில்  மீன்பிடி படகு தளம் அமைக்கக்கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் மனு அளித்தார்
தமிழ்நாடு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் ஒரு மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் இனயம் புத்தன்துறை மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்த மீனவர்கள் இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தால் கடற்கரை மணற்பரப்பு அடித்து செல்லப்பட்டு, அன்றாடம் தொழில் செய்ய முடியாத நிலைய ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரை கிராமத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இனயம் புத்தன்துறை பகுதியில் தூண்டில் வளைவுடன் கூடிய படகு அணையும் தளம் கொண்ட மீன் இறங்குதளமாக மேம்பாடு செய்து கோரிக்கை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மதுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனு அளிக்கும் நிகழ்ச்சியில் இனயம் புத்தன்துறை ஆலய பாதிரியார் சகாய செல்வன் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story