கே.ஆர்.பி. அணையில் டன் கணக்கில் இறந்து கிடக்கும் மீன்கள்

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 1958 ம் ஆண்டு கிருஷ்ணகிரி அருகே கே.ஆர்.பி. அணை கட்டி முடிக்கப்பட்டு இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீரை ஆதாரமாக கொண்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட மகளின் குடிநீர் தேவைகளை இந்த் தென்பெண்ணை ஆற்று நீர் நிவர்த்தி செய்து வருகிறது.

52 அடி உயரம் கொண்ட இந்த அணையில் மீன்வளத்துறை சார்பில் மீன் வளர்க்கப்பட்டு ஒப்பந்த முறையில் மீன்கள் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் கோடை மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக வேகமாக குறைந்தது இதில் 37 அடிக்கு கீழ் நீர்மட்டம் சென்ற நிலையில் வெப்பமானது 108 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தென்பெண்ணை ஆற்றில் கடந்த இரண்டு மாதங்களாக நீர்வரத்து முற்றிலுமாக இல்லாமல் வறண்டு காணப்பட்ட நிலையில் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் நந்தி மலை, பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கடந்த வாரம் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கிருஷ்ணகிரி அணைக்கு வந்தடைந்தது. இந்த நீருடன் பெங்களூர் பகுதியில் இருந்து கழிவுநீருடன் கலந்த ரசாயன கெமிக்கல்ஸ் கலந்து நுரை பொங்கிய நிலையில் இந்த நீர் கே.ஆர்.பி. அணைக்கு வந்ததால், அணையில் வளர்க்கப்பட்ட மீன்கள் 3 டன் அளவிற்கு இறந்து தண்ணீரில் மிதந்தும், கரைகளில் ஒதுங்கியும் காணப்படுகிறது. ரசாயனம் கலந்த கெமிக்கல் நீர் வந்ததால் மீன்கள் இறந்து மிதப்பதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இருந்த மீன்கள் தண்ணீரில் மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளதாக வேதனையை தெரிவிக்கின்றனர். எனவே இறந்த மீன்களை அப்புறப்படுத்தி சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மீன்வளத்துறை அலுவலரிடம் கேட்டபோது கடும் வெப்பம் காரணமாக மீன்கள் இருந்துள்ளது. இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மீன்கள் இறப்புக்கு ரசாயனம் கலந்த நீர் வந்ததால் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story