நத்தம் அருகேயுள்ள பிடாரக்குளத்தில் மீன்பிடி திருவிழா

நத்தம் அருகேயுள்ள பிடாரக்குளத்தில் மீன்பிடி திருவிழா

மீன்பிடி திருவிழா

நத்தம் அருகேயுள்ள கருத்தலக்கம்பட்டி சத்திரக்கண்மாய் மற்றும் சேத்தூர் ஊராட்சியில் உள்ள பிடாரக்குளத்தில் வியாழக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
நத்தம் அருகேயுள்ள கோசு குறிச்சி ஊராட்சி கருத்தலக்கம்பட்டி சத்திரக்கண்மாய் மற்றும் சேத்தூர் ஊராட்சியில் உள்ள பிடாரக்குளத்தில் மீன்பிடி திருவிழா வியாழக்கிழமை நடந்தது. இதையொட்டி இக் கண்மாய், குளத்தின் ஆயக்கட்டுதாரர்கள் இயற்கை செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மதியம் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வாணம் வெடித்து மீன்பிடி திருவிழாவை தொடங்கினர். இதில் கருத்தலக்கம்பட்டி, புதூர், சேத்தூர், குரும்பபட்டி, நல்லூர், சின்னையம்பட்டி, சேத்தூர் அரவக்குறிச்சி, கரையூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வலை, ஊத்தா, மூங்கில் கூடை போன்ற மீன்பிடி சாதனங்களை கொண்டு மீன் பிடித்தனர். அப்போது கட்லா, லோடு, சில்வர் கெழுத்தி, விரால், ஜிலேபி போன்ற மீன் வகைகளை பிடித்து ஆர்வத்துடன் கொண்டு சென்றனர்.

Tags

Next Story