மீன்பிடி திருவிழா - அள்ளிச்சென்ற பொதுமக்கள்
மீன்பிடி திருவிழா
நெற்குப்பையில் மீன்பிடி திருவிழாவில் மீன்களை வீட்டிற்கு அள்ளிச்சென்ற பொதுமக்கள்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நெற்குப்பை கீழத்தெரு செட்டியூரணியில் தண்ணீர் குறையத் தொடங்கியதால் மீன்பிடி திருவிழா நடத்த ஊர் முக்கியஸ்தர்கள் ஊத்தா குத்து மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து ஊரின் வளர்ச்சி நிதிக்காக ஒரு ஊத்தாவிற்கு ரூபாய் 300 வீதம் வசூல் செய்வது என முடிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீன்பிடி சாரதிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஊரின் வளர்ச்சி நிதிக்கு பணத்தை செலுத்தினர். அங்கிருந்து ஊர் முக்கியஸ்தர்கள் மீன்பிடிக்க அனுமதி கொடுத்தவுடன் ஊத்தாவுடன் மின்னல் வேகத்தில் வந்த மீன்பிடி சாரதிகள் செட்டியூரணியில் துள்ளிய மீன்களை ஊத்தாவை குத்தி பிடிக்க துவங்கினர். இதில் கட்லா, ரோகு, விரால், சிசி உள்ளிட்ட மீன்கள் சிக்கின. ஒவ்வொரு மீன்பிடி சாரதிகளுக்கும் 2 கிலோ முதல் 4 கிலோ வரை மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
Next Story