களரம்பட்டி ஏரியில் மீன் பிடித் திருவிழா

களரம்பட்டி ஏரியில் மீன் பிடித் திருவிழா பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்து சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிரம்பியது. விவசாயிகள் இந்த ஏரி தண்ணீர் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியில் மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டு தண்ணீர் குறைந்த உடன் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 16 ஆண்டுகளாக ஏரிகள் மீன் பிடித்து திருவிழா நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் களரம்பட்டி ஏரியில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதை ஒட்டி நேற்று அதிகாலையில் இருந்து பொதுமக்கள் களரம்பட்டி ஏரிக்கு வர தொடங்கினர். ஏரிக்கரையில் உள்ள வரகுபாடி தேம்பாடி அம்மன்களுக்கு கிராம மக்கள் சீர் செய்து பூஜைகள் செய்தவுடன் ஏரியில் மீன் பிடி திருவிழா தொடங்கியது. இதில் களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் ஏரியில் இறங்கி வலை கத்தா கூடை சேலை கொசுவலைகள் பயன்படுத்தி போட்டி போட்டு மீன்களை பிடிக்க தொடங்கினர். பலருக்கு அதிக எடை உள்ள மீன்கள் கிடைத்தன. அதிலும் விரால் கெண்டை கெளுத்தி உழுவை உள்ளிட்ட மீன்களும் மற்றும் வளர்ப்பு மீன்களும் கிடைத்தன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீன்பிடி திருவிழா நடந்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் மீன் பிடித்து சென்றனர்.

Tags

Next Story