பொன்னமராவதியில் மீன்பிடித் திருவிழா!

பொன்னமராவதி அருகே வேகுப்பட்டியில் நடந்த மீன்பிடி திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.
பொன்ன மராவதி அருகே வேகுப்பட்டி ஊராட்சி அளவலந்தான் பெரிய கண்மாயில் கோடைக்காலத்தை முன்னிட்டும், ஊர்மக்கள் ஒற்றுமையாக இருக்கவும், நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் வேகுப் பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மீன்பிடி உபகரணங்களான வலை,ஊத்தா, கச்சா, பரி ஆகி யவற்றை கொண்டு மீன் பிடித்தனர். வலையில் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, அயிரை, விரால் உள்ளிட்டவை கிடைத்தன.

Tags

Next Story