ரெட்டியபட்டி கிராமத்தில் இரு கண்மாய்களில் மீன்பிடித் திருவிழா

ரெட்டியபட்டி கிராமத்தில் இரு கண்மாய்களில் மீன்பிடித் திருவிழா
பொன்னமராவதி அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் இரு கண்மாய்களில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பாரம்பரிய முறையில் மீன்பிடித்தனர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் கோசி கண்மாய்,தட்டான் கண்மாய் உள்ளிட்ட இரு கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. விவசாய பாசன கண்மாய்களில் நெல் அறுவடைக்குப் பின்னர்.கோடை காலத்தில் பாசன கண்மாய்களில் நீர் வற்றத் தொடங்கும் பொழுது மீண்டும்‌ அதேபோல் விவசாயம் நடைபெற வேண்டும் என‌ மீன்பிடித்திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் மீன் பிடித்த திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி தொடங்கி வைத்தவுடன் பொதுமக்கள் கண்மாயில் துள்ளி குதித்து உபகரணங்கள் ஆன ஊத்தா,கச்சா, பரி,வலை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு போட்டி போட்டுக் கொண்டு மீன்பிடித்தனர் தொடங்கினர். மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, அயிரை, விரால் உள்ளிட்ட கிடைத்தன. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story