சிவகாசி அருகே மீன்பிடி திருவிழா - போட்டி போட்டு மீன்களை பிடித்த மக்கள்

சிவகாசி அருகே மீன்பிடி திருவிழா - போட்டி போட்டு மீன்களை பிடித்த மக்கள்
 மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள்...
சிவகாசி அருகே ஆனையூரில் நடந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனையூர் கிராமத்தில் முதல் முறையாக மீன்பிடி திருவிழா நடைபெற்றது.இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் ஆனையூர் கண்மாய் நிரம்பியது.பல்வேறு கிராமங்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது போன்று நமது கிராமத்திலும் மீன்பிடி திருவிழா நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதில் ஆனையூர்,அய்யம்பட்டி, லட்சுமியாபுரம்,காந்தி,இந்திரா, முத்திரையர் நகர் ஆகிய 6 கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.இதில் நாட்டு வகை மீன்களான கட்லா,கெண்டை, கெளுத்தி,விரால்,ஜிலேபி உள்பட பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள்,பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி,போட்டுக் கொண்டு கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

கிராம மக்கள் கூறும்போது, மீன்பிடி திருவிழா இதுவரை வெளியூர்களில் நடந்து வருவதை தான் கேள்வி பட்டு இருக்கிறோம்.தற்போது முதல்முறையாக எங்கள் கிராமத்திலும் மீன்பிடி திருவிழா நடத்தி இருக்கிறாம்.பொது மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் திரண்டு நிகழ்ச்சியில் பங்கு கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

Tags

Next Story