பழையசீவரம் பாலாற்றில் மீன் பிடிப்பு

பழையசீவரம் பாலாற்றில் மீன் பிடிப்பு

மீன் பிடிப்பு 

பழையசீவரம் பாலாற்றில் மீன் பிடிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பருவமழை காலத்திற்கு முன்னதாகவே நிரம்பிய இத்தடுப்பணையில், தொடர்ந்து தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

கோடைக்காலங்களில், நீர்நிலைகள் வறண்டு, ஏரி மற்றும் குளங்களில் மீன்கள் பிடித்து அதிக அளவில் மீன்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். அச்சமயங்களில் ஏரிகளிலும், ஆறுகளிலும் இருந்து பிடித்து வருகின்ற நாட்டு மீன்கள் கிராமங்களில் விற்கப்படும்.

ஆனால், பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில், தண்ணீர் தேங்கி உள்ளதால், பழையசீவரம், திருமுக்கூடல் சுற்றுவட்டார பகுதியினர் சிலர், வலைகள் மூலம், ஆற்று மீன்கள் பிடித்து விற்பனை செய்கின்றனர். 1 கிலோ முதல் 5 கிலோ வரையிலான எடை கொண்ட கெண்டை மீன்கள் இப்பகுதி ஆற்றில் அதிக அளவில் கிடைக்கிறது.

இதுகுறித்து, அப்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தோர் கூறியதாவது: பொதுவாக ஆற்று மீன் சமைத்து சாப்பிடும்போது, அதில் தனி விதமான ருசி இருக்கும். இதனால், பாலாற்று மீனை பலரும் விரும்பி வாங்குகின்றனர். ஒரு கிலோ மீன் 200 ரூபாய் வீதம், விற்பனை செய்து வருகிறோம்.

கூட்டாக இணைந்து நாள் முழுதும் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு, இதன் மூலம் கிடைக்கும் மொத்த வருமானத்தை பங்கிட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story