மீன்பிடித் தொழில் மந்தம் - விசைப்படகு மீனவர்கள் ஏமாற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சலில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டு மரங்கள் மற்றும் பைபர் வளங்களில் மீன் பிடித் தொழில் நடைபெற்று வருகின்றன. தற்போது குளச்சலில் கேரை மீன்கள் சீசனாகும். ஆனால் ஆழ்கடல் பகுதி சென்ற விசைப்படகுகளில் மீனவர்களுக்கு கேரமீன்கள் கிடைக்கவில்லை. இதனால் விசைப்படகினர் ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர். இதற்கு இடையே கட்டுமரங்களில் பிடிக்கப்படும் சாளை நெத்திலி போன்ற மீன்களும் கிடைக்கவில்லை.
மீன் வரத்து இல்லாததால் வள்ளம், கட்டுமரம் மீனவர்கள் மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை என மீனவர் ஒருவர் கவலை தெரிவித்தார். குளச்சலில் போதிய மீன்கள் கிடைக்காததால் வியாபாரிகள் பக்கத்து கிராமங்களில் இருந்து மீன்களை வாங்கி வியாபாரம் செய்கின்றனர். மீன்பிடித் தொழில் மந்தமாகியுள்ளதால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைத்துள்ளனர்.