குமரி கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் 

குமரி கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் 

பைல் படம் 

கன்னியாகுமரி கிழக்கு கடலோர பகுதியில் வரும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு மீனவர்கள் மின் பிடிப்பதற்கான தடை அமலுக்கு வரவுள்ளது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒடுங்குபடுத்தும் சட்ட விதிகளின் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு இழு வலை விசைப்படகுகள் கிழக்கு கடலோர பகுதியில் மீன் பிடிப்பதற்கு ஆண்டு தோறும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. நடபாண்டில் கன்னியாகுமரி கிழக்கு கடலோர பகுதி தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் வரை ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை உள்ள மீனவர்கள மீன்பிடிக்க 61 நாட்களுக்கு தடை அமலுக்கு வருகிறது. இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்தடை மீறி மீன்பிடி தொழில் செய்வார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் சம்பந்தப்பட்ட விசைப்படகுகள் பதிவு ரத்து செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags

Next Story