குமரி மேற்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதி ஆகிய கன்னியாகுமரி, சின்ன முட்டம் பகுதியில் ஆண்டுதோறும ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், குளச்சல், தேங்காப்பட்டணம், தூத்தர், நீரோடி ஆகிய கடற்கரை கிராமங்களில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம்.
இந்த நிலையில் மேற்கு கடற்கரை கிராமங்களில் தடைக்காலம் வரும் ஜூன் 1ஆம் தேதி துவங்குகிறது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் படகுகளை பழுது பார்ப்பார்கள். வலைகள் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வது வழக்கம மீன்பிடி தடைக்காலம் துவங்குவதை ஒட்டி ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகள் இந்த மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு கரை திரும்புகின்றன. ஆனால் பைபர் வள்ளம், கட்டு மரங்கள் போன்றவை வருடத்தில் அனைத்து நாட்களிலும் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது.