மீன் பிடி தடை காலம் - மீன்கள் விலை இரு மடங்காக அதிகரிப்பு.

மீன் பிடி தடை காலம்   - மீன்கள் விலை இரு மடங்காக அதிகரிப்பு.

மீன்கள் விற்பனை 

மீன் பிடி தடை காலம் எதிரொலியாக மீன்கள் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. பட்டினம்பாக்கம் கடற்கரையில் நேற்று கிலோவிற்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை அதிகரித்து மீன்கள் விற்கப்பட்டன.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வருடா வருடம் மீன் பிடி தடை காலம் விதிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த வருடத்திற்கு கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மீன் பிடி தடைக்காலத்தின் எதிரொலியாக மீன்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை ஓரம் விற்கப்படும் மீன்களின் விற்பனையானது இரு மடங்காக அதிகரித்துள்ளது .

நேற்று வார இறுதி விடுமுறை நாளையொட்டி சென்னையில் பல்வேறு பகுதியில் இருந்து பட்டினம்பாக்கம் கடற்கரையில் மீன் வாங்க பொதுமக்கள் வந்த வண்ணமாக உள்ளனர். மீன்களின் விலையை பொறுத்தவரை கடம்பா கிலோ 300 ரூபாய், நண்டு கிலோ 500 ரூபாய்,பெரிய வஞ்சிரம் கிலோ 1000 ரூபாய், இது 700 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்ந்துள்ளது. சிறிய வஞ்சிரம் மீன் கிலோ 700 ரூபாய், பெரிய இறால் 450 ரூபாய், சிறிய இறால் 350 சங்கரா மீன் கிலோ 300 ரூபாய் , சங்கரா மீன் கிலோ 300 ரூபாய், கடல் வௌவால் மீன் கிலோ 700 ரூபாய், ஏரி வௌவால் மீன் 300 ரூபாய், நெத்திலி மீன் கிலோ 300 ரூபாய், கெண்டை மீன் கிலோ 130 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களை வாங்க ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் விலையை கேட்டு தயங்கி விலைக்கு ஏற்றது போல் குறைவாக வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

Tags

Next Story