மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் பொதுமக்கள் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் பொதுமக்கள் சார்பில் பிளாஸ்டிக் இல்லாத கடலை காப்போம்! தூய்மையான கடற்கரை உருவாக்குவோம்! என வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று 23ம் தேதி காலை நடைபெற்றது
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் பொதுமக்கள் சார்பில் பிளாஸ்டிக் இல்லாத கடலை காப்போம்! தூய்மையான கடற்கரை உருவாக்குவோம்! என வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாகை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து தொடங்கியது மாரத்தான் போட்டியை நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கெளதமன் கொடி அசைத்து வைத்து தொடங்கி வைத்தார். உடன் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், நகரக் கழகச் செயலாளர்கள் நாகை இரா.மாரிமுத்து, நாகூர் எம்.ஆர். செந்தில் குமார், நாகை டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் நாகரெத்தினம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், மாவட்ட திமுக தொழிலாளர் அணி தலைவர் எஸ். என் மோகன்தாஸ், மற்றும் கிராம பஞ்சாயத்து அவர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story