மீன் வியாபாரி கொலை வழக்கு: மூன்று பேர் கைது
கைதானவர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமராஜ் என்ற வாலிபர் தனது மீன் கடைக்கு மீன் வாங்க நண்பருடன் காரில் வந்தார், காரை மீன் மார்க்கெட் அருகில் நிறுத்திவிட்டு மீன்களை வாங்கி மீண்டும் காரில் ஏற்றிய போது, அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ராமராஜ்யை துரத்தி வெட்டியது இதில் சம்பவ இடத்தில் ராமராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து உறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது, மேலும் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க திருச்சி மாநகர ஆணையர் காமினி அவர்கள் நான்கு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார், அதன் பேரில் தனிப்படை போலீசார் திருச்சி பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரவுடிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது, தொடர்ந்து இந்த வழக்கில் பெரம்பலூரை சேர்ந்த பிரகாஷ்(34), விஜயராஜ்(33), ராஜீ என்கிற டால்டா கண்ணன்(33) ஆகிய மூன்று பேரை தனிபடை உறையூர் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஒரு பட்டா கத்தி, ஒரு சூரி கத்தி, ஒரு வீச்சரிவாள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர், மேலும் இந்த கொலை தொடர்பாக இரண்டு பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.