தொடர் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது

திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஐந்து வாலிபர்களை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார்  கைது செய்து 18 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் பைக்குகள் நிறுத்துமிடம், பஜார், வீடுகளுக்கு முன்பு நிறுத்திவைக்கும் பைக்குகள் திருடப்படுவது சமீப காலமாக அதிகரித்தது. இதேபோல் கனகம்மாசத்திரம், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் பைக்குகள் திருட்டு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் புகார் செய்துள்ளனனர். பைக் திட்டு சம்பவங்கள் தொடர்பாக திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் பொதட்டூர்பேட்டை மற்றும் ஆர்.கே.பேட்டை பகுதிகளில் தனிப்படை போலீசார் சோதனையில் சந்தேகத்தின் பேரில் ஐந்து வாலிபர்களை மடக்கிப்பிடித்து விசாரத்ததில் தொடர் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. வாலிபர்களை காவல் நிலையங்களில் ஒப்படைக்கபப்ட்டு ஆர்,கே,பேட்டை இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் பொதட்டூர்பேட்டை எஸ்ஐ இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் மாலமேடு சேர்ந்த ஆறுமுகம்(22), பெருங்காஞ்சி மேல் வெங்கடாபுரம் சேர்ந்த அன்பரசு(24), கொடைக்கல் சேர்ந்த ஆகாஷ்(22), சிவராஜன்(19), சூர்யா (எ) லொடுக்கு (22) ஆகியோர் இணைந்து திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் திருடிய 18 பைக்குகள் பறிமுதல் செய்து வாலிபர்கள் ஐந்து பேரை கைது செய்யப்பட்டு பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story