ராமநாதபுரத்தில் நகைகடன் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

ராமநாதபுரத்தில் நகைகடன் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 

ராமநாதபுரம் அருகே நகைக்கடன் மோசடியில்  ஈடுபட்ட முன்னாள் வங்கி செயலாளர் உட்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டு  தண்டனை நீதிமன்றம் உறுதி செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 1993-1994ஆம் ஆண்டுகளில் ரூ.7,65,110/- நகைக்கடன் மோசடி வழக்கில் ஈடுபட்ட முன்னாள் வங்கி செயலாளர் சந்திரன் மற்றும் 05 நபர்கள் மீது இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் அவர்கள் எதிரிகளுக்கு கடந்த 02.09.2016ஆம் தேதி வழங்கிய 2 வருட சிறை தண்டணையை எதிர்த்து எதிரி சந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் தண்டணை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து,

கீழமை நீதிமன்றத்தில் வழங்கிய தண்டனை மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எதிரி சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆன எதிரி சந்திரனை மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

Tags

Next Story