செய்யாறு உதவும் கரங்கள் சார்பில் ஐம்பெரும் விழா
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
செய்யாறு உதவும் கரங்கள் ஐம்பெரும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா, அமுதசுரபி 525 நாள் விழா, வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சேவை விருதுகள் வழங்குதல், நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தலைவர் தி.எ.ஆதிகேசவன் தலைமை தாங்கினார். பொருளாளர் சி.ரவிபாலன், கௌரவ ஆலோசகர் டி.ஜி.விஜயவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜெ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
செங்கல்பட்டு மருத்துவர் கே.டி.குணசேகரன் அவர்களுக்கு சேவா ரத்னா விருது, காஞ்சிபுரம் முரளி மோத்தி பார்மா எஸ்.முரளி கிருஷ்ணன் அவர்களுக்கு சேவை செம்மல் விருது, கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் ஆர்.சந்திரசேகரன் அவர்களுக்கு சாதனையாளர் விருது அனக்காவூர் ஒன்றியம் மேல்நெமிலி நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் ஆர்.தேன்மொழி அவர்களுக்கு அன்னை தெரசா விருது, அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர் எஸ்.கவிதா அவர்களுக்கு மகாகவி பாரதி விருது,
வந்தவாசி வருவாய் ஆய்வாளர் எம்.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது, தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மாநில செய்தி தொடர்பாளர் வாழ்குடை புருஷோத்தமன் அவர்களுக்கு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் விருதும் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் வினோத் நாயர், ஏ.என். ராஜசேகரன் ஆகியோர் இணைந்து விருதுகளை வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. மேலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 140 நபர்களுக்கு வேட்டி, டி சர்ட், புடவை, ஜாக்கெட், டவல், புத்தாண்டு காலண்டர் ஆகியவைகளை கே.குமரன் வழங்கினார். செய்யாறு நகரின் சிறு வியாபாரிகளின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.1 இலட்சம் தொழிலதிபர் ஆர்.ராஜ்குமார் வழங்கினார். ஒகினவோ கோஜூ ரியூ கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவர்கள் கராத்தே சிறப்பு பயிற்சி பெற உபகரணங்கள் வாங்கிட ரூ.15,000 அச்சகத் தொழில்களின் தொழிலதிபர் வீ.மேகநாதன் வழங்கினார். உயர்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.20,000 வீதம் குடியாத்தம் வி.எம்.பஷீர்அகமது வழங்கினார். நர்சிங் டிப்ளமோ இந்திராணி பழங்குடி மாணவிக்கு கல்வி உதவித்தொகை ரூ.13,000 தொழிலதிபர் ஜம்போடை சீனிவாசன் வழங்கினார். பெரணமல்லூர் ரோட்டரி சங்க உறுப்பினர்களுக்கு டி சர்ட் வந்தவாசி டாக்டர் குமார் வழங்கினார் மேல்நேமிலி மாற்றுத்திறனாளி 8 வகுப்பு மாணவர் ராகேஷ் அவர்களுக்கு ரோட்டரி உதவி ஆளுநர் எஸ்.வீரராகவன் ரூ.5,000 வழங்கினார். சென்னசமுத்திரம், வெள்ளை பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் எவர்சில்வர் டிரம் 4 நிலஎடுப்பு தனி வட்டாச்சியர் எ.சுபாஷ் வழங்கினார். செய்யாறு பகுதி பார்வையற்ற 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,000 மதிப்பில் 100 டிபன் கேரியர் காஞ்சிபுரம் மூத்த வழக்கறிஞர் பி.ராஜமாணிக்கம் வழங்கினார். விழாவிற்கு வந்த அனைவருக்கும் சுற்றுசூழலை பாதுகாக்க 500 மரக்கன்றுகளை சேத்துபட்டு பாலமுருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ஜி.வள்ளிகாந்தன், அம்மன் கே.குணசேகரன் துணை செயலாளர் பி.சிவானந்தகுமார், இன்னர்வீல் மெய்.பூங்கோதை, செங்கல்பட்டு வீ.பாண்டியன், காஞ்சிபுரம் எஸ்.சந்தானகிருஷ்ணன், தெள்ளார் டி.கே.ஜி.ஆனந்த், பெரணமல்லூர் பி.மாலவன், செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.டி.பாண்டியன், டாக்டர்.வீ.கார்த்தி, மனவளக்கலை பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் அன்னதான பொருப்பளார் ஜி.ஆனந்த் நன்றி தெரிவித்தார்