தனியார் நிறுவனத்தில் திருட்டு ஐந்து பேர் கொண்ட கும்பல் கைது

தனியார் நிறுவனத்தில் திருட்டு ஐந்து பேர் கொண்ட கும்பல் கைது
X
திருட்டு வழக்கில் ஐவர் கைது
இன்ஜின் வால்வு தயாரிக்கும் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் 600 கிலோ மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

விராலிமலை அடுத்த வடுகப்பட்டி ஊராட்சி வேலூர் சாலையில் இன்ஜின் வால்வு தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணியாற்றி வரும் விமல் வயது 45 நிறுவனத்தில் உள்ள மூலப்பொருள்கள் இருப்பை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது இன்ஜின் வால்வு தயாரிக்கப்படும் 600 கிலோ மதிப்புள்ள பொருள்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது பற்றி விராலிமலை போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட கீழப் பொருவாயை சேர்ந்த லோகநாதன் வயது 26, ராசநாயக்கன்பட்டி சேர்ந்த முருகேசன் வயது 40, மணப்பாறை தாலுக்கா ஆரியம்பட்டியைச் சேர்ந்த திருப்பதி வயது 27, வண்ணங்கொம்பு பின்னத்தூரை சேர்ந்த ராஜேஷ் வயது 41, திருட்டுப் பொருள்களை வாங்கிய பழைய இரும்பு கடை உரிமையாளர் ஞானசேகர் வயது 29 ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story