பெரம்பலூரில் இரண்டு பேரை அருவாளால் வெட்டிய வழக்கில் ஐந்து பேர் கைது

இரண்டு பேரை அருவாளால் வெட்டிய வழக்கில் கைது

இரண்டு பேரை அருவாளால் வெட்டிய வழக்கில் கைது

இரண்டு பேரை அருவாளால் வெட்டிய வழக்கில் கைது

இரண்டு பேரை அருவாளால் வெட்டிய வழக்கில் கைது

இரண்டு பேரை அருவாளால் வெட்டிய வழக்கில் கைது
பெரம்பலூரில் இரண்டு பேரை அருவாளால் வெட்டிய வழக்கில் ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரணை, முக்கிய குற்றவாளிகளுக்கு வலைவீச்சு.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் எலி என்கிற வெங்கடேசன் வயது -20 இவர் தற்பொழுது ஆலம்பாடி சமத்துவபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்கிற மார்க்கெட் சிவா வயது18, மற்றும் சங்குப்பேட்டையை சேர்ந்த தாஸ் என்கிற தசரதன் வயது -19 என்பவர்களுக்கும் இடையே ஏற்கனவே செல்போன் பிரச்சனையில் முன் விரோதம், இருந்துள்ளது இந்நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி மாலை நிர்மலா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த எலி என்கிற வெங்கடேசனை இருசக்கர வாகனத்தில் வந்த, தாஸ் மற்றும் மார்க்கெட் சிவா ஆகிய இருவரும் கத்தி மற்றும் அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனைக் கண்ட அவரது நண்பர் அப்துல்அஜிஸ் தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் தலையில் வெட்டிய மார்க்கெட் சிவா மற்றும் தசரதன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசன் மற்றும் அப்துல் அஜீஸ் ஆகிய இருவரையும் பெரம்பலூர் நகர போலீசார், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் . பிப்ரவரி 11ஆம் தேதி இதில் தொடர்புடைய தம்பிரான்பட்டியைச் சேர்ந்த ராகுல், பெரம்பலூர் கேகே நகர் பகுதியில் சேர்ந்த ஆனந்த், பேரளியைச் சேர்ந்த அருண், மற்றும் பாலாஜி, கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பகுதியைச் சேர்ந்த விஜய், ஆகிய ஐந்து பேரையும் பிடித்து காவல் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியான மார்க்கெட் சிவா மற்றும் தசரதன் ஆகிய இருவரின் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story





