லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேர் அதிரடி கைது. போலீசார் தீவிர விசாரணை.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரிகள் ஆங்காங்கே விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியமாக கிடைத்த தகவலை எடுத்து திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்ட தேர்தல் வேட்டை தொடங்கியது, இதில் ராஜா கவுண்டம்பாளையம் முனியப்பன் கோவில் அருகே லாட்டரி சீட்டு விற்பனையும் பணபரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த முகம்மது ஹிமாமுதீன் (35),ராஜா கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த அம்பானி என்கிற கோபாலகிருஷ்ணன் (33),சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (44),ராஜா கவுண்டம்பாளையம் சேர்ந்த நந்தகுமார் (37)சூரியம்பாளையம் சேர்ந்த வேலு (52)ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர், இதில் மேலும் தொடர்புடைய ஈரோட்டை சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் தலைவராக உள்ள வி எஸ் பி மோகன் பிரகாஷ் சேலத்தைச் சேர்ந்த இளவரசன் சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சபரி,பிரகாஷ்,விஜய் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்ட ஐந்து பேரிடமிருந்து செல்போன் ரொக்கப்பணம் 2100,பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோட்டில் சேர்ந்த முகம்மது ஹிமாவுதீன் மரப்பாலம் பகுதியில் உள்ள கேவிபி வங்கியில் ரூ 11 லட்சத்துடன் லாட்டரி சீட்டு வாங்குவதற்கு பயன்படுத்தி வந்த வங்கி கணக்கு முடக்கப்பட்டது. லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை தடுக்க திருச்செங்கோடு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags

Next Story