ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்
சீர்காழியில் 5,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிற்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன; காப்பீட்டை முழுமையாக வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் வைத்தீஸ்வரன்கோவில், வள்ளுவக்குடி, கொண்டல்,தேனூர், அகனி,குன்னம்,மாதானம்,வடபாதி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா சாகுபடி சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது, தற்பொழுது கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், அறுவடைக்கு இன்னும் 10 நாட்களே தயாராக இந்த சம்பா சாகுபடி நெற்பயிர் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி மூழ்கி அழுகி விட்டது முழுவதுமாக அழிவை சந்தித்து விட்டதால் 100 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் பாதித்து,அதிலிருந்து தப்பித்து ஓரளவு காப்பாற்றிய நெற்பயிர் தற்போது முற்றிலும் அழிந்துள்ளதால் விவசாயிகளுக்கு அரசு முழமையாக நிவாரணம் வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த முழு மானியத்துடன் ஏக்கருக்கு 5 கிலோ உளுந்து,பயிர் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்,கடந்தாண்டு 17 ஊராட்சிக்கு முழுமையாக விவசாயம் பாதித்தும் காப்பீடு கிடைகாததால் வேளாண்துறை அதிகாரிகள் முழு கவனம் செலுத்தி காப்பீடு தொகை பெற்று தர வேண்டும், விவசாயிகள் பாதித்த விளைநிலங்களுக்கு உரிய கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்